இந்தியாவின் பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா யாழ்ப்பாணம் வருகை!

Thursday, February 8th, 2018

யாழ்ப்பாணத்திற்கு இந்தியாவின் பிரபல பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா  விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய துணைத்தூதரகம்அறிவித்துள்ளது.

கீரிமலை – நகுலேஸ்வரம் ஆலயத்தில் மகா சிவராத்திரி தினமான எதிர்வரும் 13ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு  சமுதாய முன்னேற்றத்திற்கு பெரிதும் துணைசெய்வது அறிவியலே! ஆன்மீகமே! எனும் தொனிப்பொருளில் மாபெரும் பட்டிமன்றம் இடம்பெறவுள்ளது.

இந்த பட்டிமன்றத்தில் இந்தியாவின் பிரபல பட்டிமன்ற பேச்சாளர்களான திருமதி பாரதி பாஸ்கர் மற்றும் திரு. ராஜா ஆகியோருடன், யாழ்ப்பாணத்தில் உள்ள சிறந்த பேச்சாளார்களான, பேராசிரியர் தி. வேல்நம்பி, உட்பட தமிழருவி த.சிவகுமாரன்,  செந்தமிழ் சொல்லருவி ச.லலீசன் மற்றும் பத்திரிகையின் ஆசிரியர்ந.விஜயசுந்தரம் ஆகியோர் பேசவுள்ளனர்.

இப்பட்டிமன்றம் இந்தியாவின் 69ஆவது குடியரசு தின நிகழ்வுகளின் தொடர் நிகழ்வாக இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106