வீணையின் வெற்றி மக்களின் வெற்றியாக அமையும்- டக்ளஸ் தேவானந்தா எம்.பி!

Tuesday, February 6th, 2018

வீணையின் வெற்றி என்பது நிச்சயம் மக்களின் வெற்றியாகவே அமையப்பெறும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு யாழ். நாவாந்துறைப் பகுதியில் இடம்பெற்ற பிச்சாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

நாம் என்றும் மக்களுடன் நின்று மக்களுக்காக சேவை செய்து வருகின்றோம் அந்தவகையில் மக்களிடம் வாக்குக் கேட்கும் உரிமை எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய எமக்கு மட்டுமே உள்ளது.

மக்கள் கேட்கும் உரிமை வேறு எந்த சக தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் கிடையாது. அவ்வாறு அவர்கள் கேட்டதற்கு மக்களுக்கு என்ன செய்துள்ளார்கள் என்று கேள்வி எழுப்பிய டக்ளஸ் தேவானந்தா

வரவுவுள்ள சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அப்போது தான் மக்களின் வாழ்வியலில் பல மாற்றங்களை நிச்சயம் நாம் ஏற்படுத்த முடியும் என்றும் தெரிவித்ததுடன் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எமது கட்சியின் கொள்கை நிலைப்பாடாகும்.

அவ்வாறே மக்கள் எமக்கு ஆணை தரும் பட்சத்தில் நிச்சயம் பாரிய மாற்றங்களை எம்மால் ஏற்படுத்த முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:


தேசிய நல்லிணக்கத்தை இரு கைகளாலும் பற்றிப் பிடித்து முன்னேற வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. த...
வருத்தப்படாத வாலிபர் சங்க உள்ளக விளையாட்டு அரங்கை வினைத் திறனாக செயற்படுத்த கட்சி நிதியிலிருந்து விள...
வலி கிழக்கில் ஈ.பி.டி.பியை கட்டமைப்பு ரீதியில் செழுமைப்படுத்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நடவடி...