ஒரு நாளில் மும்பை விமான நிலையத்தில் 980 விமானங்களை இயக்கி சாதனை!

Tuesday, February 6th, 2018

உலகிலேயே மிகவும் பிசியாக உள்ள ஒற்றை ஓடுபாதை விமான நிலையமான மும்பை விமான நிலையத்தில் எப்போதுமே விமானங்கள்புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும் வரிசையில் காத்துக் கிடக்கும்.

ஒரு விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அடுத்த விமானம் தரையிறங்கும். இப்படியே மாறி மாறி இயங்கியபடி இருக்கும். அங்கு கடந்தாண்டு டிசம்பர் 6ஆம் திகதி ஒரு நாளில் மட்டும் 974 விமானங்கள் இயக்கப்பட்டன. இதுவே சாதனையாகக் கருதப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்த சாதனையை மும்பை விமான நிலையம் முறியடித்துள்ளது. அங்கு கடந்த மாதம் 20ஆம் திகதி 24 மணி நேரத்தில் 980 விமானங்கள் இயக்கப்பட்டன.

இங்கிலாந்தில் உள்ள கேட்விக் ஒற்றை ஓடுபாதை விமான நிலையமும் கோடைக் காலத்தில் நாள் ஒன்றுக்கு 870 விமானங்களை இயக்குகிறது. இவ்விமான நிலையம் ஒரு மணி நேரத்தில் 55 விமானங்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. மும்பை விமான நிலையம் ஒரு மணி நேரத்தில் 52 விமானங்களை இயக்கியுள்ளது.

ஆசிய அளவில் பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில் பிசியான விமான நிலையங்களின் பட்டியலில் மும்பை விமான நிலையம் 14ஆவது இடத்தில் உள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டில் இந்த விமான நிலையம் 4 கோடியே 44 லட்சத்து 80 ஆயிரம் பயணிகளைக் கையாண்டுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106