கொடிகாமத்தில் 13 உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை!
Tuesday, February 6th, 2018
கொடிகாமம் நகரப்பகுதியில் உள்ள உணவகங்கள் மீது நடத்திய திடீர்ப் பரிசோதனையில் காலவதியான பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்த மற்றும் சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கிய 13 உணவக உரிமையாளர்களுக்கு எதிராகவும், மென்பான நிறுவனங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என சாவகச்சேரி சுகாதாரப் பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் கொடிகாமம் நகரப்பகுதியில் இயங்கும் உணவகங்கள் மீது அண்மையில் திடீர் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
அவ்வேளையில் திகதி காலவதியான மென்பானங்கள், சொக்லேட், பிஸ்கட் வகைகள் விற்பனைக்கு வைத்திருந்தமையைக் கண்டு பிடித்தனர். உணவகங்களில் வைக்கப்பட்டிருந்த மென்பானப் போத்தல்களில் தவறான சுட்டுத்துண்டுகள் காணப்பட்டமையும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தப் பொருள்கள் பலவற்றை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106