ஊஞ்சல் கயிறு நெரித்து சிறுமி பரிதாப பலி!

Monday, February 5th, 2018

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் சிறுமி ஒருவர் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த போது கழுத்தில் கயிறு இறுகியதால் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியைச் சேர்ந்த சிவநேசன் அக்சயனி (வயது – 9) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அக்சனியாவை நித்திரையாக்கிவிட்டு பெற்றோர் சந்தைக்கு சென்றுள்ளனர். திரும்பி வந்து பார்த்த போது சிறுமி கட்டிலில் காணப்படாமையைத்தொடர்ந்து பெற்றோர் தேடியுள்ளனர்.

இதன்போது கழுத்து பகுதி இறுகிய நிலையில் ஊஞ்சலில் சிறுமி காணப்பட்டுள்ளார். உடனடியாக அவரை பெற்றோர் யாழ்.போதனாவைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும் சிறுமி கொண்டு வருவதற்கு முன்னரே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்களால்தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறுமியின் சடலத்தினை உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைத்துள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளைமேற்கொண்டு வருகின்றனர்.

Related posts:

நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் இலங்கைக்கு ஆதரவு!
தானிய வகைகளைக் கொள்வனவு செய்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டுமென - பொது சுகாதார பரிசோதகர்கள...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அடுத்த புரட்சி விவசாயத்தில் - அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப்...