புகையிரத நிலைய அதிபர்கள் வேலை நிறுத்தத்தில்?
Saturday, May 6th, 2017
அரச வைத்தியர் சங்கம் உள்ளிட்ட 121 தொழிற்சங்கங்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புகையிரத நிலைய அதிபர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்று(05) நான்கு மணி முதல் தாம் பணிகளில் இருந்து விலகி இருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று(05) பணிக்கு சமூகமளிக்காத ஒப்பந்த அடிப்படையிலான புகையிரத பாதுகாவலர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான சாரதிகள் பணியிலிருந்து நீங்கியதாக கருதப்படுவர் என புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்!
மேலதிக இடவசதி வழங்க அனுமதி - பிரதி பொலிஸ்மா அதிபர்!
கடந்த ஆண்டை விட இவ்வாண்டு 97.5 வீதத்தினால் அதிகரிப்பு - சுற்றுலாத்துறை வருமானம் குறித்து இலங்கை மத்...
|
|
|


