இலங்கைக்கு சீன ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்து செய்தி!
Sunday, February 4th, 2018
70ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இலங்கையிக்கு சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது,
சீனாவுக்கும் இலங்கைக்குமிடையிலான நீண்டகால நட்புறவு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் மிகவும் சிறப்பான நிலையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை எதிர்காலங்களில் இரு நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் பலப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ள சீன ஜனாதிபதி, 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு புதிய பேருந்துகள் கொள்வனவு!
பொருளாதார நெருக்கடி தொடர்பில் அரசாங்கம் கரிசனை - அனைத்து மக்களுக்கும் நிவாரணம் - ஜனாதிபதி ரணில் விக...
உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொறிமுறையுடன் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசு அக்கற...
|
|
|


