பஸ் சாரதிகளுக்கான பயிற்சி திட்டம்! 

Tuesday, January 30th, 2018

பொதுப் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பஸ் சாரதிகளுக்கான விஷேட பயிற்சியின்  முதற்கட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக வீதிப் பாதுகாப்புஅதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதில் விபத்து ஏற்படுத்திய இலங்கைப் போக்குவரத்து சபையின் 160 சாரதிகள் இணைத்துக் கொள்ளப்பட்டதாக அதிகாரசபையின் தலைவர் சிசிர கோந்தாகொடகூறியுள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து பஸ் சாரதிகளையும் அடுத்த கட்ட பயிற்சியின் போது இணைத்துக் கொண்டு பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளதாக அவர்தெரிவித்துள்ளார்.

இதேவேளை முச்சக்கர வண்டி சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்காக விண்ணப்பிப்பவர்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்க முன்னர் விஷேட கட்டாயப்பயிற்சி வழங்கும் திட்டம் ஒன்றை மேற்கொள்ள வீதிப் பாதுகாப்பு அதிகாரசபை தீர்மானித்துள்ளது.

மேலும் நாளுக்கு நாள் முச்சக்கர வண்டி விபத்துக்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதால் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு அதிகாரசபையின்தலைவர் சிசிர கோந்தாகொட கூறியுள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106