கிண்ணத்தை வென்றது இலங்கை!

Sunday, January 28th, 2018

இலங்கை,- பங்களாதேஷ், சிம்பாப்பே அணிகளுக்கிடையில் பங்களாதேஷில் இடம்பெற்ற முக்கோண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவின் மிர்புர் விளையாட்டரங்கில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணி 79 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இலங்கை அணி கடந்த 2016 நவம்பரில் சிம்பாபேயில் இடம்பெற்ற முக்கோணத் தொடருக்கு பின்னர் ஒரு நாள் கிரிக்கெட் தொடரொன்றை வெற்றி கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 221 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 41.1 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இலங்கையில் அறிமுக வீரராக களமிறங்கிய ஷெஹான் மதுசங்க, மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்து பெற்று ஹெட்ரிக் சாதனை படைத்தார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106