தொழில்நுட்பக் கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
Friday, January 26th, 2018
தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் கீழ் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் (ஐஊவுவு ௲ Nஏஞ டுநஎநட 4 ) சான்றிதழைப் பெறுவதற்கான இலவசப் பயிற்சி நெறிக்கு யாழ்ப்பாணம், மானிப்பாய் பயிற்சி நிலையங்களிற்கு கோரப்பட்டுள்ளன.
கல்வித்தகைமை க.பொ.த (சா.த) இல் கணிதம் – உ, ஆங்கிலம் – உ, உள்ளடங்கலாக 6 பாடங்களில் சித்தி. அல்லது கணிதம் – ள, ஆங்கிலம் – ள, உள்ளடங்கலாக 6 பாடங்களில் சித்தியும் க.பொ.த (உ.த) இல் 2 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
அத்துடன், விண்ணப்ப முடிவுத் திகதியன்று 25 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
தகுதி உடையவர்கள் முழுப்பெயர், முகவரி, பிறந்த திகதி, தேசிய அடையாள அட்டை இலக்கம், கல்வித் தகைமைகள், தொலைபேசி இலக்கம், பயில விரும்பும் பயிற்சி நிலையம் என்பவற்றைக் குறிப்பிட்டு சுயமாகத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை மாவட்ட அலுவலர் இல.44, சோமசுந்தரம் வீதி, சுண்டுக்குளி, யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு 10.02.2018 இற்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
அத்துடன் காகித உறையின் இடது பக்க மேல் மூலையில் தகவல் தொடர்பாடல் கற்கை நெறி (ஐஊவுவு) க்கான விண்ணப்பம் என தவறாது குறிப்பிட வேண்டும் என யாழ். மாவட்ட அலுவலர் கி.கிருஷ்ணபாலன் அறிவித்துள்ளார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106