இலங்கை அணி ஜீனியர் கிரிக்கெட் காலிறுதியில் வெற்றி!

Thursday, January 25th, 2018

இலங்கை மற்றும் கென்யா அணிகளுக்கு இடையில் நடந்த காலிறுதி போட்டியில் இலங்கை அணி 311 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 13 ஆம் திகதி முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கிண்ண ஜீனியர் கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்தில் ஆரம்பமாகியுள்ளது. போட்டியில்பங்குபற்றியுள்ள 16 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இலங்கை மற்றும் கென்யா அணிகள் காலிறுதிபோட்டி ஒன்றில் லிங்கொயின் மைதானத்தில் மோதியுள்ளன.

முதலில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 419 ஓட்டங்களை பெற்றுள்ளது. இலங்கை அணி சார்பில் பொயகொட 152பந்துகளில் 191 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கென்யா அணி 35.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 108 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 311 ஓட்டங்களால்இலங்கை அணியிடம் தோல்வியடைந்துள்ளது. இலங்கை அணி சார்பில் ஆட்டநாயகனாக 191 ஓட்டங்களை பெற்ற பொயகொட தெரிவு செய்யப்பட்டுள்ளார்



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106