விரைவில் புதிய கடவுச்சீட்டுகள் – குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர்!

Monday, January 22nd, 2018

நவீன உலகிற்குப் பொருத்தமான வகையில் இவ்வருடத்தில் கடவுச் சீட்டுக்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஷாமிந்த ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

இதற்குத் தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாளாந்தம் கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்வதற்காக சுமார் 2 ஆயிரம் பேர் வருகை தருவதாக அவர் குறிப்பிட்டார்.ஒருநாள் சேவைக்கு மேலதிகமாக பொதுவாக இரண்டு வாரங்களில் கடவுச்சீட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.

பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டையுடன் வரும் நபர்களுக்கு வெளியார் துணையின்றி கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ள முடியும் . இதற்காக தமது அதிகாரிகளின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஷாமிந்த ஹெட்டியாரச்சி மேலும் தெரிவித்தார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106