சூப்பர் 10 சுற்றுக்கு முன்னேறியது வங்கதேசம்!

Monday, March 14th, 2016

உலக கிண்ணம் டி20போட்டியில் ஓமன் அணியை வென்று சூப்பர் 10 சுற்றுக்கு வங்கதேசம் முன்னேறியுள்ளது.

நேற்று இரவு (13) தர்மசாலாவில் நடைபெற்ற12-வது லீக் ஆட்டத்தில் வங்கதேசம், ஓமன் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற ஓமன் அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.

முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 180 ஓட்டங்களை குவித்தது.

பதிலளித்தாட களமிறங்கிய ஓமன் அணி வங்கதேசத்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.

இந்நிலையில் மழை காரணமாக ஆட்டம் 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 120 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் 12 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 65 ஓட்டங்களை மட்டுமே ஓமன் அணி எடுத்தது.

இதனால் 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றிப்பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 10 சுற்றுக்கும் அந்த அணி  முன்னேறியுள்ளது

 



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106