விமானத்தின் சமிக்ஞைகள் கிடைத்துள்ளன!
Thursday, June 2nd, 2016
கடந்த மாதம் மத்திய தரைக்கடலில் விழுந்த ஈஜிப்த் எயார் என்ற விமானத்தின், விமான ஒலிப்பதிவுகளிலிருந்து வரும் சமிக்ஞைகளை கண்டறிந்துள்ளதாக பிரஞ்சு விசாரணையாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பிரஞ்சு கடற்படை கப்பல்களில் ஒன்றிற்கு இதன் சமிக்ஞை கிடைத்துள்ளது. அந்த சமிக்ஞை, விமானம் தேடப்படும் கடல் பகுதியில் இருந்து வந்துள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு வாரங்களுக்கு முன், 66 விமான பயணிகளுடன் பாரிஸிலிருந்து கெய்ரோவிற்கு சென்றுகொண்டிருந்த Airbus320 விமானம் விபத்துக்குள்ளானது. இதன்போது கிரேக்க மற்றும் எகிப்திய ராடார் திரைகளிலிருந்து வெளிப்படையாக எந்த அபாய அறிகுறிகளையும் கொடுக்காமல் அந்த விமானம் மறைந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குழந்தைகள் யாசகம் செய்ய செனகலில் தடை!
உணவில் விஷம் கலந்து ராம்குமார் கொலை? -வழக்கறிஞர் தகவல்!
சுவாதியின் பெற்றோர் தலைமறைவா?
|
|
|


