சரியான அரசியல் தலைமையாக டக்ளஸ் தேவானந்தாவை மட்டுமே எம்மால் கணிப்பிட முடிந்துள்ளது – கட்சியின் பூந்தோட்டம் பகுதி வேட்பாளர் பாலபிரசன்னா!
Saturday, January 20th, 2018
எமது எதிர்காலத்தை தீர்மானிப்பதில் அரசியலில் முக்கியத்துவம் என்பது இன்றியமையாதது என்றுள்ள நிலையில் அந்த அரசியல் தலைமைத்துவத்தை திறம்பட அர்ப்பணிப்போடு முன்னெடுத்துவரும் தலைமையாக நாங்கள் டக்ளஸ் தேவானந்தாவை மட்டுமே காண்கின்றோம். எனவே அவரது கட்சியை வெற்றியடையச் செய்வதற்கு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவுப் பலத்தை தரவேண்டும் என வவுனியா பூந்தோட்டம் பகுதி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் பாலபிரசன்னா தெரிவித்துள்ளார்.
வவுனியா பூந்தோட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
நாங்கள் இளையோராக ஒன்றிணைந்து இந்தத் தேர்தலை எதிர்கொண்டுள்ளோம். நாம் வெற்றியை இலக்காகக் கொண்டு அதனூடாக எமது பகுதிகளை அபிவிருத்தியில் முன்னேற்றுவதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளோம்.
கடந்தகாலங்களில் உரிமைகளைப் பேசி வாக்ககுக் கேட்டவர்கள் எம்மை ஏமாற்றிவிட்டுள்ள நிலையில் இன்று நாம் சரியான அரசியல் தலைமையைத் தேர்ந்தெடுத்துள்ளம். அந்த சரியான அரசியல் தலைமையாக டக்ளஸ் தேவானந்தாவை மட்டுமே எம்மால் கணிப்பிட முடிந்துள்ளது. எமது இந்த கணிப்பென்பது சரியானதாகவும் இறுதி முடிவானதாகவும் இருக்கின்றது.
அந்தவகையில் தேர்தல் நெருங்கும் வேளையில் மக்களாகிய உங்களிடத்தில் பலர் வருவார்கள். அவர்கள் வாக்குறுதிகள் பலவற்றை வழங்குவார்கள். ஆனால் அதில் ஒன்றைக் கூட அவர்கள் ஒருபோதும் நிறைவேற்றித் தரமாட்டார்கள். அதுதான் இந்த பூந்தோட்டம் பகுதிக்கும் நடந்தேறியது.
இந்த பகுதியை வென்றெடுக்கும் பட்சத்தில் இந்தப் பகுதியின் பெயருக்கு ஏற்றவகையில் நிச்சயம் பூந்தோட்டத்தை பூத்துக்குலுங்கும் பகுதியாக மட்டுமன்றி அபிவிருத்தியில் சிறந்த பகுதியாகவும் மாற்றியமைப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106