கொடுத்த வாக்குறுதிகளுக்கு செயல்வடிவம் கொடுத்த செயல்வீரர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே – சரவணை மக்கள் புகழாரம்!

Friday, January 19th, 2018

கொடுத்த வாக்குறுதிகளுக்கு  செயல்வடிவம் கொடுத்த செயல்வீரனாக டக்ளஸ் தேவானந்தாவையே நாம் பார்க்கின்றோம் என சரவணை சின்ன மடு மக்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

வேலணை சரவணை சின்னமடுவில் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த மக்களே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

மேலும் தேவைகள் என்பது மக்களிடம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் அந்தத் தேவைகளை உள்வாங்கிக்கொண்டு அவற்றை சேவைகளாக செய்து முடிப்பவர்களையே நாம் எப்போதும் மனதில் நிறுத்தவேண்டும்.

அந்தவகையில் மக்களாகிய எங்களது தேவைகளை இனங்கண்டு அவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காண்பவராக டக்ளஸ் தேவானந்தா அவர்களை மட்டுமே நாங்கள் பார்க்கின்றோம்.

ஒருகாலத்தில் தீவகத்தின் கல்வி நிலை பாரிய வீழ்ச்சி கண்டிருந்தது. அக்காலகட்டங்களில் நாம் நேரடியாக சென்று எமது கல்வித்தரத்தை உயர்த்துவதற்கேற்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு நாம் கோரிக்கை விடுத்திருந்தபோது எமது மாணவர்களுக்கென பிரத்தியேக வகுப்புக்களை நடத்தும் பொருட்டு ஒரு கல்விக் கூடத்தை அமைத்து அதனூடாக எமது மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்துவதற்கு உதவியாக இருந்த டக்ளஸ் தேவானந்தாவை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம்.

அவரது இந்த சேவையானது இந்த சந்ததிக்கு மட்டுமன்றி அடுத்துவரும் எமது சந்ததிக்கும் நிச்சயமாக பயனுள்ளதாகவே அமைந்துள்ளது. ஒவ்வொரு காலகட்டங்களிலும் நல்ல தமிழ்த் தலைவர்களை காலம் எமக்கு பரிசளித்துவருகின்றது.

அந்தவகையில்தான் இந்தக் காலத்தில் காலம் எமக்குத் தந்த காவியத் தலைவராக டக்ளஸ் தேவானந்தா மிளிர்ந்துகொண்டிருக்கின்றார். அத்துடன் நெருக்கடிகளுக்கும் சவால்களுக்கும் மத்தியில் அவர் பல்வேறுபட்ட மக்கள் பணிகளை துணிச்சலுடன் முன்னெடுத்துவருகின்றார்.

ஏனைய தமிழ் அரசியல் தலைமைகளைப் பார்க்கிலும் அவர் முற்று முழுதான ஒரு மாறுபட்ட தலைவர் என்பதை வரலாறு இன்று நிரூபித்துள்ளது. அதாவது தேர்தல் வெற்றிக்காக மட்டும்  வாக்குறுதிகளை அள்ளி வழங்கும் தமிழ் அரசியல் வாதிகளுக்கு மத்தியில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் செயல் வீரராகவும் கரும வீரராகவும் அவர் திகழ்கின்றார்.

தீவகத்தின் அபிவிருத்தி நிலைக்கும் காலம் மட்டும் அவரது பெயர் என்றும் நிலைத்திருக்கும். குறிப்பாக மக்களாகிய நாம் யுத்தப் பாதிப்புக்களிலிருந்து மீண்டு வரவும், யுத்தத்தால் அழிவடைந்த பகுதிகளை மீளக் கட்டியெழுப்புவதற்கும் இந்த மகத்தான பணியை தீவக மக்களாகிய நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம் என்றும் அந்த மக்கள் சுட்டிக்காட்டினர்.

எனவேதான் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சின்னமான வீணைச் சின்னத்திற்கு வாக்களித்து கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்த நாம் எல்லோரும் திடசங்கற்பம் பூண்டுள்ளோம் என்றும் அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் கருத்து தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா மக்களிடம் நாம் கேட்டுக்கொள்வதென்னவென்றால் இது தேர்தல் காலம் என்பதால் மக்கள் ஒருமித்த வாக்குப் பலத்தை எமக்கு வழங்குவதனூடாக தீவகத்தில் மேலும் பல அபிவிருத்திப்பணிகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்புக்கள் நிச்சயம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

எனவே நீங்கள் தருகின்ற ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன் என்று தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா வீணையின் வெற்றி மக்களின் வெற்றியாகவும் மக்களின் வெற்றி வீணையின் வெற்றியாகவும் அமைவதற்கு மக்களின் ஏகோபித்த ஆதரவுப்பலம் அவசியமானதென்றும் சுட்டிக்காட்டினார்.

DSC_0364 DSC_0402 DSC_0439



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106