புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காணிகளை அளவிட நடவடிக்கை!
Thursday, January 18th, 2018
பொது மக்களின் காணி தொடர்பான பிரச்சினையைத் தீர்த்து அவற்றின் உரிமையை அவர்களுக்கு உறுதி செய்வதற்கு காணி மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர்கயந்த கருணாதிலக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இதற்கமைவாக இவ்வருடத்தில் 38 லட்சம் காணிகளை அளவீடும் பணிகளை பூர்த்தி செய்ய அரச நில அளவையாளர் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்கென அமெரிக்க நிறுவனம் ஒன்றின் தொழிநுட்பம் மற்றும் அரச மற்றும் தனியார் துறையினரின் நில அளவை திணைக்களத்தின் ஒத்துழைப்பும்பெற்றுகொள்ளப்பட்டுள்ளதாக நிலஅளவையாளர் பி.என்.பி உதய காந்த தெரிவித்துள்ளார்.
இந்த அளவீடு நடவடிக்கை நவீன நில அளவீடு உபகரணம் மற்றும் செய்மதி தொழிநுட்பத்தை பயன்படுத்தி இடம் பெறுகின்றது. இதற்காக நாடு முழுவதிலும் 41 ஜீபிஸ்தொழிநுட்ப கோபுரங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றில் 6 கோபுரங்கள் தற்போது கொழும்பு இரத்தினபுரி கேகாலை கட்டான அவிசாவளை ஆகிய பகுதிகளில்அமைக்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் மேல்மாகாணத்தில் 25 லட்சம் காணியும் நாட்டின் ஏனைய மாகாணங்களில் 11லட்சம் காணிகளும் அளவிடப்படவுள்ளன.
இந்த 36 லட்சம் காணிகளையும் நில அளவை திணைக்களத்தினால் அளவிடப்படுமாயின் அதற்கு 30 வருடத்திற்கு மேல் செல்லும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இந்தப்பணி புதிய தொழிநுட்பத்தை பயன்படுத்தி ஒரு வருட காலத்திற்குள் பூர்த்தி செய்யப்படும் என்று நிலஅளவையாளர் தெரிவித்துள்ளார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106