இரவிலும் இயங்கிவரும் காக்கைதீவு மீன் சந்தை!
Wednesday, January 17th, 2018
இரவு நேரத்திலும் இயங்குவதற்கு வசதியாக காக்கைதீவு மீன் சந்தைக்கு பிரதேச சபையால் மின்னிணைப்பு விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன் வியாபாரிகள் மட்டுமல்ல பாவனையாளர்களும் பயனடைந்துள்ளனர்.
வலி. தென்மேற்கு பிரதேசத்தில் காக்கை தீவு இறங்குதுறையில் கூறுவிலை மண்டபத்துக்கு அருகாமையில் பிரதேச சபையின் அனுமதியின்றிச் சுகாதார விதி முறைகளுக்கு முரணான வகையில் வசதியீனங்களுக்கு மத்தியில் இயங்கிவந்த மீன்சந்தை குறித்து நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கையடுத்து மேற்படி சந்தை நீதிவானின் உத்தரவுக்கமைய சுமார் ரூபா 20 இலட்சம் செலவில் சகல வசதிகளுடனும் அமைக்கப்பட்டு இயங்கிவருகின்றது.
வலி.தென்மேற்கு பிரதேசத்திலுள்ள 7 சந்தைகளில் இந்தச் சந்தை மட்டுமே மாலை 4 மணியிலிருந்து இரவு 8 மணிவரை இயங்கி வந்தது. சந்தை முதன்மை வீதியோரத்தில் இயங்கியதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
இதனால் பயனாளிகள் மற்றும் வியாபாரிகளின் நன்மை கருதி புதிதாக அமைக்கப்பட்ட மீன் சந்தையில் வைத்துக் கடலுணவுகளை விற்பதற்கு வசதியாக சந்தைக்கு மின்னிணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106