இலங்கையில் பலரது பாராட்டுக்களைப் பெற்ற பேருந்து நூலகம்!

Tuesday, January 16th, 2018

இலங்கையில் சேவையில் ஈடுபடும் பேருந்து ஒன்றில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பலரும் தங்களது பாராட்டுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

மக்கள் நாளாந்தம் தமது போக்குவரத்தை அரச மற்றும் தனியார் பேருந்துகளில் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போதைய பேருந்துகளில் இசை மற்றும் திரைப்படங்கள் ஒளிபரப்பப்படுவது வழக்கம். இது பயணிகளுக்கு மகிழ்ச்சியை அல்லது வெறுப்பை தரக்கூடியதாக அமையும்.ஆனால் தனியார் பேருந்து ஒன்றில் மக்களின் பாராட்டை பெற்றுக் கொள்ளும் வகையில் சிறிய நூலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த பேருந்து ஹொரன – கண்டி பகுதிகளுக்கான போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ளது.

இதில் சிறிய கதை புத்தகங்கள் மற்றும் நாவல்கள் பொது அறிவு போன்ற சிறந்த நூல்கள் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை பயணிகள் தங்களுக்கு தேவையான புத்தகங்களை எடுத்து வாசிக்க முடியும் எனவும் இதற்கு கட்டணம் எதும் செலுத்தத் தேவை இல்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106