வாகனப் பதிவில் பாரிய வீழ்ச்சி!

Thursday, January 11th, 2018

கடந்த வருடத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 2016ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைவடைந்திருப்பதாக மோட்டார் வாகனப்போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டில் 4 இலட்சத்து 93 ஆயிரத்து 320 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. கடந்த வருடத்தில் 4 இலட்சத்து 48 ஆயிரத்து 620 வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

கடந்த வருடத்தில் பொதுப்போக்குவரத்து வாகனப் பதிவு அதிகரித்துள்ளது. முச்சக்கர வண்டி பதிவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் மோட்டார் சைக்கிள் பதிவுஅதிகரித்துள்ளது.

மேலும் மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தின் கீழ் புகை தொடர்பான சான்றிதழ் இல்லாவிடின் வாகனப் பதிவுகளை மேற்கொள்ள முடியாது என்றுமோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் இதற்காக அறவிடப்படும் தண்டப்பணம் அதிகரிக்கப்பட்டிருப்பதாகவெளியாகியுள்ள தகவலை அவர் நிராகரித்துள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106