நாம் முன்னெடுத்துச் செல்லும் யதார்த்த வழிமுறையையே மக்கள் விரும்புகிறார்கள்!
Monday, January 8th, 2018
கடந்தகாலங்களில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவேண்டும் என்பதையே மக்கள் விரும்புகிறார்கள். அந்தவகையில் நாம் அதிகப்படியான உள்ளூராட்சி மன்றங்களை வென்றெடுக்கும் நோக்கைக் கருத்தில் கொண்டு நாம் அனைவரும் கடுமையாக உழைக்கவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தீவகத்தின் மூன்று உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் யாழ்.மாநகரசபை ஆகியவற்றை கடந்தகாலங்களில் நாமே எமது ஆளுகையில் வைத்திருந்தோம். அப்போது குறித்த பகுதிகளை மட்டுமல்லாது அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் முடியுமானவரைக்கும் பல்வேறு பணிகளை முன்னெடுத்து சாதித்துக் காட்டியிருந்தோம்.
ஆனாலும் நாம் மக்களுக்காக பலவேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் சந்தர்ப்பங்களில் அவற்றின் ஆட்சிக்காலங்கள் நிறைவடைந்திருந்தது. இதனால் தொடர்ச்சியாக அப்பணிகளை முன்னெடுக்கப்படமுடியாது போனமையானது ஒரு துரதிஸ்ரவசமானதாகவே எண்ண முடிகின்றது.
எனவே வர இருக்கின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாம் எமது மக்களுக்கான பணிகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு அதிகளவிலான உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றி மக்கள் நலன்சார்ந்த பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு ஒவ்வொருவரும் திடசங்கற்பம் பூணவேண்டும். அதற்காக ஒன்றிணைந்து உழைக்கவும் வேண்டும்.
அவ்வாறு எல்லோருடைய பங்களிப்புடனும் ஒத்துழைப்புடனும் ஆட்சி அதிகாரங்களை நாம் பெறுவோமானால் அதனூடாக எமது பிரதேசங்களை மேம்படுத்துவதுடன் அபிவிருத்தியாலும் முன்னேற்றங்காணச் செய்ய முடியும்.
எனவே வர இருக்கின்ற சந்தர்ப்பத்தை மக்களாகிய நீங்கள் உங்களது எதிர்காலத்திற்கானதாக அமைத்துக்கொள்ள எமது வீணைச்சின்னத்துக்கு வாக்களித்து எமது கரங்களை பலப்படுத்தங்கள் . அதுவே உங்கள் வாழ்வின் விடியலுக்கானதாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.


|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106