தேர்தல் முறைமை தொடர்பில் தெளிவில்லாத வாக்காளர்கள் – பெபரல்!

Sunday, January 7th, 2018

புதிய தேர்தல் முறைமை தொடர்பில் 80 வீதமான வாக்காளர்களுக்கு போதியளவு தெளிவு கிடையாது என முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெபரல் தெரிவித்துள்ளது.

அத்துடன் சில வேட்பாளர்களுக்குக் கூட தேர்தல் முறைமை பற்றி தெளிவில்லை எனவும்  பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 14ம் திகதி வரையில் இரண்டாண்டுகளாக உள்ளுராட்சி மன்ற சட்டம் காலத்திற்கு காலம் திருத்தி அமைக்கப்பட்டது. இதனால் புதிய தேர்தல் முறைமை தொடர்பில் மக்கள் தெளிவு பெற்றுக்கொள்ளக்கூடிய கால அவகாசம் கிடைக்கவில்லை.தேர்தல் முறைமை குறித்து செயலமர்வுகளை நடத்தும் போது பெரும்பான்மையான வாக்காளர்களுக்கு போதியளவு தெளிவில்லை என்பது தெரியவந்தது.புதிய தேர்தல் முறைமை பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு அரசியல் கட்சிகள் போதியளவு சிரத்தை எடுத்துக்கொள்ளவில்லை.

தேர்தல் ஆணைக்குழு, பெபரல் போன்ற அமைப்புக்களே தேர்தல் முறைமை பற்றி மக்களை தெளிவுபடுத்தி வருகின்றன.எனினும் வாக்களிப்பது மிகவும் சுலபமானது, தனக்கு விருப்பான கட்சியின் சின்னத்திற்கு எதிரே வாக்காளர்கள் புள்ளடி இடுதல் போதுமானது.எனவே வாக்குகள் நிராகரிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் அபாயம் கிடையது என ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106