சுவிஸில் பனிக்கிரிக்கெட்டில் இலங்கை வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்!
Sunday, December 31st, 2017
இருபதுக்கு இருபது ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் சுவிட்சர்லாந்தின் பனியுடன் கூடிய விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இலங்கை அணியின்முன்னாள் தலைவரும் நட்சத்திர வீரருமான மஹேல ஜெயவர்த்தன மற்றும் லசித் மலிங்க ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
இந்தப் போட்டித் தொடர் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதில் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்கள் மற்றும் ஓய்வுபெற்ற சிரேஸ்ட வீரர்கள் என பலரும் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டித் தொடரில் பத்ராஸ் பேலஸ் டயமன்ட் மற்றும் ரோயல்ஸ் என இரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இதில் ரோயல் அணியில் சயிட் அப்ரிடி, டேனியல் விட்டோரி, கிரான்ட் எலியட், நெதன் மெக்கலம், மொன்டி பெனசர், ஒவிஸ்ஸா, ஜெக் காலிஸ், கிரேகம் ஸ்மித், சோயிப்அக்தர் மற்றும் அப்துல் ரசாக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் பத்ராஸ் பேலஸ் டயமன்ட் அணியின் சார்பில் விரேந்திர சேவாக், மைக்கல் ஹசி, லசித் மாலிங்க, மஹேல ஜயவர்தன, மெஹமட் கைப் மற்றும் டுவாயன்பிரோவோ ஆகியோர் விளையாடவுள்ளனர்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106