காபுல் நகரில் குண்டு வெடிப்பு – 45 க்கும் மேற்பட்டோர் பலி!
Friday, December 29th, 2017
ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் இருவேறு இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் 45 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் உள்ள ‘ஆப்கன் வாய்ஸ்’ என்ற இடத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததாக அந்நாட்டு உள்துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறிது நேர இடைவெளியில், புலே சோக்ஹிடியா பகுதியில் உள்ள தெப்யானில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்குள்ள, கலாச்சார மையத்தை குறிவைத்து தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இன்னும் பலர் படுகாயமடைந்துள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106