யூரியா உரம் பற்றாக்குறை: அம்பாறை விவசாயிகள் பாதிப்பு!

Sunday, December 24th, 2017

யூரியா உரத்தினைப் பெற்றுக்கொள்வதற்காக அம்பாறை  நாமல் தலாவ கமநல சேவைகள் திணைக்களத்திற்கு சென்றிருந்த விவசாயிகள் பலர் வெறுங்கையுடன் திரும்பினர்.

10,000 ஏக்கர் விவசாய நிலப்பரப்பினை நிர்வகிக்கும் நாமல் தலாவ கமநல சேவைகள் திணைக்களத்திடம் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு வெறுமனே 250 பைகள் உரம் மாத்திரமே இருந்தது.

இவ் உரப்பற்றாக்குறை தொடர்பில் உரக் கூட்டுத்தாபனத்திடம் வினவியபோது, தற்போது 7000 தொன் உரத்தினை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் தலைவர் ரோஸன் வடுகே தெரிவித்தார்.

இந்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் மேலும் 72,000 தொன் உரத்துடன் கப்பல் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

எனினும், உரத்தின் அளவு பெரும்போக நெற்செய்கைக்கு போதுமானதாக இல்லை எனவும் உரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106