இரு வாரம் மத்தியூஸ் அவுட்_ பங்களாதேஸ் தொடரில் இணைவாரா

Sunday, December 24th, 2017

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டது.

போட்டியின் 12 வது ஓவரை வீசிய இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மத்தியூஸ் இடைநடுவே உபாதைக்குள்ளானார். இவருக்கு ஏற்பட்டுள்ள தசைப்பிடிப்பு காரணத்தால் மத்தியூஸ் இறுதி போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன் இருவாரங்கள் ஓய்வெடுக்கவும் பணிக்கப்பட்டுள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப்பின்னர் இணைந்த மத்தியூஸ், டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் சில ஓவர்கள் பந்துவீசியிருந்தார். துடுப்பாட்ட தூணாக பங்களிப்பை நல்கிவருகின்றார். வருகின்ற வருடம் ஆரம்பத்தில் ஆரம்பமாகவுள்ள பங்களாதேஸ் அணிக்கான தொடரில் மத்தியுஸ் பங்கேற்பாரா என்பது சந்தேகமே! அணியில் மீள இணைந்துள்ள அசேல பூரண குணமாகவில்லை என்பது இங்கு சுட்டத்தக்கதாகும்.

கடந்த இரு வருடங்களாக இலங்கை அணி வீரக்ளின் உபாதை என்பது தொடர்கதையாகவே உள்ளது. புதிய தலைமையின் கீழ் இதற்கு தீர்வு கிடைக்குமா என்பது பொறுத்தே அறிய வேண்டும்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106