எரிபொருள் தட்டுப்பாடு மீண்டும் ஏற்படும் அபாயம் -கனிய எண்ணெய் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்!

Saturday, December 23rd, 2017

கனிய எண்ணெய் கையிருப்புகளை பராமரிக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படும் என கனிய எண்ணெய் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு;

எரிபொருள் கப்பல் ஒன்று வந்தால் 14 நாள்கள் அளவிலேயே வைத்துக்கொள்ளமுடியும். 14 நாள்களுக்குள் கப்பலொன்று வராவிட்டால் வீதியில் நிற்க வேண்டிய நிலை ஏற்படும். மூன்று மாதங்களுக்கு எவ்வாறு எரிபொருளை வைத்திருக்கமுடியும்? அப்படியாயின் இன்றும் 90 கொள்கலன்கள் நிரப்ப வேண்டும். ஒரு மாதத்துக்கு எரிபொருளை வைத்திருக்க வேண்டுமாயின் 20 கொள்கலன்கள் நிரப்ப வேண்டும். அந்த 20 கொள்கலன்கள் நிரப்ப வேண்டுமாயின் இன்னும் 10 கோடி டொலருக்கும் அதிக பணம் தேவைப்படும்.

எரிபொருளை பாய்க்கும் பணிகள் கொழும்பிலும் முத்துராஜவெலயிலும் மேற்கொள்ளப்படுகின்றன. இவை இரண்டும் 365 நாள்களும் இயங்குகின்றன. அவ்வாறாயின் அவசர திருத்தப் பணிகளைக்கூட அவற்றில் மேற்கொள்ளமுடியாது.

இவ்வாறான ஓர் இக்கட்டான நிலைமையில் ஏதாவதொரு பிரச்சினை ஏற்பட்டால் கூட பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106