இருபதுக்கு 20 போட்டிகளில் புதிய சாதனையை படைத்த பிராவோ!
Saturday, December 23rd, 2017
ஆஸ்திரேலியாவில் ஆரம்பமாகியுள்ள பிக் பாஸ் லீக் போட்டிகளில் நேற்றய போட்டியில் மெல்பேர்ண்ஸ் ரணிக்கேன்ஸ் அணிக்காக விளையாடிய பிராவோ ஹோபாட் கரிக்கேன்ஸ் அணியின் 5 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார். இதன் மூலமாக டிவைன் பிராவோ T20 போட்டிகளில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
முதல் வீரராக T20 போட்டிகளில் 400 விக்கெட்களை கைப்பற்றியமையே சாதனையாகும். IPL போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் கலக்கிய பிராவோ,365 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 400 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். பிராவோவிற்கு அடுத்தபடியாக இலங்கையின் மலிங்க 331 விக்கெட்களையும், சுனில் நரைன் 307 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர்.
தேசிய அணியில் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டுவரும் சகலதுறை வீரராக இவர், லீக் போட்டிகளான ஐ.பி.எல், பி.பி.எல், கரேபியன் பிரீமியர் லீக் முதலான போட்டிகளில் தனது திறமையை அதிகம் வெளிப்படுத்தி வருகின்றார். அவுஸ்திரேலிய லீக் தொடரின் பெற்பேற்றினூடாக ஐ.பி.எல் ஏலத்தில் சென்னை அணியில் நிரந்த வீரராக தக்க வைக்கப்படுவாரா என்பதை பொறுத்தே அறிய வேண்டும்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106