2018 ஆம் ஆண்டில் சர்வதேச தரத்திலான புதிய கடவுச்சீட்டு

Saturday, December 23rd, 2017

புதிய கடவுச்சீட்டுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் எம் என் ரணசிங்க தெரிவித்தார்.

இந்த கடவுச்சீட்டு சிவில் விமானசேவைகள் அமைப்பின் தரத்திற்கு அமைவாக சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தயாரிப்பதற்காக அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது.

2018ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் விநியோகிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். புதிய கடவுச்சீட்டை அச்சிடுவதற்கு அமைச்சரவையினால் பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள தோமஸ் ரிலாறு என்ற பிரிட்டிஷ் நிறுவனம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

தற்பொழுது புதிய கடவுச்சீட்டை விநியோகிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதனை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும். இதனைத்தொடர்ந்து அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் புதிய கடவுச்சீட்டை அச்சிடுவதற்கான பணி ஆரம்பிக்கப்படும் என்றும் திரு ரணசிங்க எமது செய்திப்பிரிவிற்கு தெரிவித்தார்



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106