லா-நினாவினால் இலங்கைக்கு பாதிப்பு குறைவு!

Monday, May 30th, 2016

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் கடும் வரட்சி மற்றும் கடும் மழை, வெள்ளத்தை ஏற்படுத்திய எல்-நினோ பருவநிலை, முடிவுக் கட்டத்தை எட்டியுள்ள, அதேவேளை, அடுத்து லா-நினா என்ற கடும் குளிரான பருவநிலை மாற்றம் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த லா-நினா பருவநிலை மாற்றத்தினால், எல்-நினோவைப் போன்று கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்றும், எனினும் இலங்கை அதிகளவில் பாதிக்கப்படாது என்றும், வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் லலித் சந்திரபால தெரிவித்துள்ளார்.

“எல்-நினோ இப்போது முடிவுக் கட்டத்தில் இருக்கிறது. ஜூன்-ஜூலை மாதமளவில் இது இயல்பு நிலைக்கு வரும். அப்போது லா-நினா உருவாகலாம். இதுவும், எல்-நினோவைப்போன்று அழிவுகளை ஏற்படுத்தலாம். எனினும், இது இலங்கைக்கு  பாரிய அச்சுறுத்தலாக இருக்காது. லா-நினா, எல்-நினோ ஆகிய இரண்டுமே சமுத்திரத்தின் வெப்பநிலை மாற்றங்களால் தான் உருவாகிறது.

இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலைகள் தெற்கு இந்தியப் பெருங்கடலில் உருவான போதும் அவற்றினால், சிறிலங்காவுக்குப் பாதிப்பு ஏற்படவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106