தேயிலையில் பூச்சி இல்லை – இலங்கைதேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர்!
Wednesday, December 20th, 2017
இலங்கையில் தற்போது தேயிலை தொடர்பில் எழுந்த பிரச்சினையை சம்மந்தமாக தேயிலை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் அச்சம் அடைய தேவையில்லை என இலங்கைதேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் எம்.எம்.ஜே.பி. கவரம்மன தெரிவித்துள்ளார். .
தலவாக்கலையில் உள்ள தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் வைத்து குறித்த பிரச்சினை பற்றி ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறுதெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
தேயிலையில் பூச்சி தாக்கம் இருப்பதாக ஊடகங்கள் ஊடாக அறிய முடிகின்றது. எம்மை பொறுத்த வரையில் அவ்வாறான தாக்கம் இருப்பதாக தெரியவில்லை. இந்த கெப்ரா பூச்சிஇனம் இலங்கையிலும், தேயிலை மலைகளிலும் இருப்பதாக இதுவரை கண்டறியப்படவில்லை.
தேயிலைகளில் இந்த பூச்சி இனம் இல்லையெனவும், ரஷ்யாவிற்கு தேயிலையை ஏற்றிச் சென்ற கொள்கலன்களிலே இது இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது சம்மந்தமாக தெளிவாக கூற முடியாது.
ஆயினும் இது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கை தேயிலை துறைக்கு இது புதியதொரு பிரச்சினை தான் என்று சொல்ல வேண்டும். எனவே இந்தபிரச்சனை தொடர்பிலும், பூச்சி இனம் எப்படி ஊடுருவியது என்பதையும் கண்டறிவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆய்வுகளின் பின்னர் இதற்கு சரியான தீர்வை எம்மால் பெற்றுக்கொள்ள முடியும். அதுவரையில் தேயிலைக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் உறுதியான கருத்துகளை கூறமுடியாது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106