தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவலை வழங்குவதற்கு மறுப்பு

Wednesday, December 20th, 2017

தகவல் அறியும் உரிமைச்சட்டதின் கீழ் உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் கோரிய தகவலொன்றை நான்கு மாதங்களாகியும் வழங்காத நிலையில் அலட்சியமான விதத்தில் அவ்வமைச்சின் தகவல் அதிகாரி பதில் ஒன்றை தகவல் கோரியவருக்கு வழங்கியுள்ளார்.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களில் காணப்படும் தகவல் ஒன்றைக்கோரி 2017.08.02 ஆம் திகதிய விண்ணப்பப்பத்திரத்திற்கமைய 2017.09.27 ஆம் திகதி இருவார கால அவகாசம் கோரி தகவல் கோரியவரான கல்விப்பணிப்பாளருக்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சின் தகவல் அதிகாரி கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

அவகாசம் கோரியபடி தகவல் அதிகாரி தகவல்களை வழங்கி 2017 டிசம்பர் 5 ஆம் திகதியிட்டு மேற்படி தகவல்களை அம்பாறை மாவட்டச் செயலகத்திடமிருந்து பெற்றக்கொள்ளுமாறு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இப்பதிலின் மூலம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தகவல் அறியும் உரிமை சட்டத்தை முற்றாக மீறியுள்ளதுடன்இ தகவல் கோரியவரின் உரிமையை மீறியுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106