ஆத்திரத்தில் இலங்கை ரசிகர்கள்!
Tuesday, December 19th, 2017
இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர்களை ஏன் மாற்றம் செய்தீர்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. இத்தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது.
இந்நிலையில் இலங்கை ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர், ஏனெனில் இலங்கை அணியில் துவக்க வீரர்களாக தன்சிகா குணதிலகா மற்றும் நிரோசன் டிக்வெல்லா தான் களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
9 முறை துவக்க ஜோடியாக களமிறங்கிய இந்த ஜோடி 618 ஓட்டங்களை குவித்துள்ளது, அதாவது இந்த ஜோடியின் சராசரி 68.66-ஆக உள்ளது.ஆனால் இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் மாற்றாக உபுல் தரங்கா மற்றும் தன்சிகா குணதிலகா களமிறங்கினர்.இவர்களின் துவக்க ஜோடி சொல்லி கொள்ளும் படி இல்லை, அதுமட்டுமின்றி துவக்க வீரரான டிக்வெல்லா ஐந்தாவது மற்றும் நான்காவது வீரராக களமிறக்கப்பட்டுள்ளார்.
அந்த இடத்தில் டிக்வெல்லாவால் ஜொலிக்க முடியவில்லை, இதைக் கண்ட ரசிகர்கள் தங்கள் டுவிட்டர் பக்கத்தில், யார் இப்படி ஒரு முடிவை எடுத்தது, இது ஒரு முட்டாள்தனமான முடிவு, சிறப்பான துவக்க ஜோடியை பிரித்துவிட்டீர்கள் ஏன்? என்று சரமாரியாக கேள்வி கேட்டுள்ளனர்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106