வட மாகாணத்தில்  நேர மாற்றம்!

Saturday, December 16th, 2017

வடக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் 2018ஆம் ஆண்டு முதல் காலை 8 மணிக்கு ஆரம்பிப்பது தொடர்பில் வடமாகாண சபை அவதானம் செலுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வட மாகாண பாடசாலைகள் 7.30க்கு ஆரம்பிக்கப்படுகின்றமையினால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுப்பதாக வடமாகாண கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விசேடமாக கிராம பிரதேசங்களில் இருந்து நகர பாடசாலைகளுக்கு வரும் மாணவர்களுக்கு போதுமான அளவு போக்குவரத்து வசதிகள் இல்லை. இதனால் காலை 7.30 மணியளவில் ஆரம்பமாகும் பாடசாலைகளுக்கு வரும் மாணவர்கள் காலை உணவை பெற்றுக் கொள்ளாமல் பாடசாலைக்கு வருகின்றனர். இதன் காரணமாக மாணவர்களால் கல்வி நடவடிக்கைகளை ஒழுங்கான முறையில் மேற்கொள்ள முடியவில்லை என ஆசிரியர்கள் தொடர்ந்தும் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனை கருத்திற் கொண்டு 8 மணிக்கு பாடசாலையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106