ஈராக்கில் 38 பேருக்கு தூக்கு தண்டனை!
Saturday, December 16th, 2017
ஈராக்கில் கொலை குற்றங்களில் ஈடுபட்ட 38 சன்னி போராளிகளுக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈராக்கில் கொலை குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 38 சன்னி போராளிகள் மீது தீவிரவாத குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் அவர்கள் தெற்கு ஈராக்கில் உள்ள நஸ்ரியா நகரின் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். பின்னர் தீவிரவாத குற்றச்சாட்டுகளில் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 38 பேரும் சிறைச்சாலையில் நேற்று(14) தூக்கிலிடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டின் நீதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 25 ஆம் திகதி ஒரே நாளில் ஈரான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சன்னி போராளிகள் 42 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன் பின் நேற்று(14), ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106