15 வயதிற்கு மேற்பட்டவர்கள் அடங்கலாக தனிநபர் பெயர்ப்பட்டியல் – ஆட்பதிவுத்திணைக்களம்!

Friday, December 15th, 2017

15 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகள் தொடர்பாக தேசிய ரீதியிலான தனிநபர் பெயர்ப்பட்டியலொன்று தயாரிப்பதற்கு ஆட்பதிவுத்திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்காக அனைத்து பிரஜைகளினதும் கைவிரல் அடையாளம் அடங்கலாக குடும்பத்தினரின் தகவல்கள் இதில் உள்ளடக்கப்படவுள்ளன. இதற்காக பிரதேச செயலாளர் அலுவலகம் மற்றும் கிராமசேவகர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் பொருட்டு பிரதேச செயலகங்களில் துணை ஆட்பதிவுத்திணைக்கள அலுவலகங்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்த அலுவலகங்களில் உள்ளோர் வீடுகளுக்குச் சென்று கைவிரல் அடையாளங்களை பெற்றுக்கொள்ளவுள்ளனர்.  2019ஆம் ஆண்டுக்கு முன்னர் இதனை தயாரிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் என்று ஆட்பதிவுத்திணைக்கள நாயகம் லியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106