ஆஷஸ்ஸில் சூதாட்டமா? ஐ.சி.சி விளக்கம்!
Friday, December 15th, 2017
இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையான வரலாற்றுச்சிறப்புமிக்க ஆஷஷ் தொடரின் 3வது டெஸ்ட் போட்டியில் சூதாட்டம் இடம்பெறவுள்ளதாக பிரபல இங்கிலாந்து பத்திரிகையான தி சன் தெரிவித்துள்ளது.
மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. முதலிரண்டு போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றுள்ளது, தொடரை தீர்மானிக்கும் 3வது போட்டியாக இந்த போட்டி காணப்படுகின்றது.மூன்றாவது போட்டியில் சூதாட்டத் தரகர்களின் ஆதிக்கம் காணப்படுவதவதாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய சூதாட்ட தரகர் குழாமொன்று ஆஷஸ் தொடரின் 3வது டெஸ்ட் போட்டியை சூதாட்டத்துக்கு உட்படுத்தப்படவுள்ளது. இந்திய சூதாட்டத் தரகர் குழாமொன்று அவுஸ்திரேலியாவில் உள்ள மர்ம நபர் ஊடாக சூதாட்டத்தை நடைமுறைப்படுத்த செயற்திட்டம் தீட்டியுள்ளது என்கின்ற தகவலோடு.
இந்த சூதாட்டத்திற்காக சுமார் ஒரு இலட்சத்து 38 ஆயிரம் பிரிட்டிஸ்ட் பவுண்டுகளை சூதாட்டக்குழு செலவிட்டுள்ளது.இதில் வீரர்கள் எவரும் நேரடியாக ஈடுபடவில்லை. சூதாட்டக்குழாம் அவுஸ்திரேலிய உலகக்கோப்பை வென்ற மூத்த சகல துறை வீரர் ஒருவர் இதில் தொடர்புபட்டுள்ளதாகவும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் வாரியம், இந்த போட்டியில் சூதாட்டம் இடம்பெறுவதற்கான எந்தவொரு ஆதரமும் இல்லை என்பதோடு எந்த வீரர்களையும் தரகர்கள் நேரடியாக தொடர்புகொள்ளவில்லை எனவும் சர்வதேச கிரிக்கட் சபை தெவித்துள்ளது.
சூதாட்டம் இடம்பெறுவதாக வெளியான தகவல்களை குறித்த பத்திரிகையிடமிருந்து ஐ,சி.சி பெற்றுள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106