சாவகச்சேரி நகராட்சி மன்ற தேர்தலில் ஒன்பது கட்சிகள் போட்டி!

Thursday, December 14th, 2017

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இம்முறை 9 பதிவு செய்யப்பட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

இன்று மதியம் நிறைவடைந்த வேட்புமனு தாக்கல் காலப்பகுதிக்குள் குறித்த நகர சபைக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஐக்கிய சோசலிச கட்சி, ஸ்ரீலங்;கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன , தமிழர் சமூக ஜனநாயக கட்சி ஆகிய ஒன்பது கட்சிகளினதும் வேட்புமனுக்கள் தேர்தல் திணைக்களத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள குறித்த நகராட்சி மன்ற தேர்தலில் எந்தவொரு சுயேட்சைக் குழுவும் போட்டியிடாத நிலையில் பதிவுசெய்யப்பட்ட கட்சிகள் மட்டுமே போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி தினத்தின் பின்னர் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட அரச அதிபர் –  நடைபெறவுள்ள தேர்தலை சுமூகமான முறையில் நடத்துவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு  வழங்க வேண்டும் என்பதுடன் தற்போது O/L பரீட்சை நடைபெற்றுவருவதால் குறித்த பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலன்களை கருத்திற் கொண்டு அவர்;களுக்கு இடையூறுகள் வழங்காதவண்ணம் தேர்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106