அவுஸ்திரேலிய ஓபன் டெனிஸில் மீண்டும் அஷரெங்கா!

Thursday, December 14th, 2017

முன்னாள் முதற்தர டென்னிஸ் வீராங்கனையான விக்டோரியா அஷரெங்காவுக்கு அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விக்டோரியா அஷரெங்கா விம்பில்டன் தொடரின் பின்னர் ,நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கொன்றின் காரணமாக எந்தவிதமான தொடர்களிலும் பங்குகொள்ளவில்லை.

தற்போது தரப்படுத்தலில் 201வது இடத்தை வகிக்கும் அஷரெங்கா 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் சம்பியன் பட்டத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது,

அவுஸ்திரேலிய ஓபன் தொடரின் பணிப்பாளர் கிரிக் டிலி, அஷரெங்கா பற்றி கருத்து தெரிவித்த போது இப்போது கஷ்டமான சூநிலையில் இருக்கின்றார், எங்களால் முடிந்த உதவியை அவருக்கு வழங்குவோம் எனவும் இதன்படி அடுத்தவருடம் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய ஓபனில் வைல்கார்ட்டு வழியாக அவரை தெரிவுசெய்துள்ளோம் எனவும் சுட்டிக்காட்டினார். மீண்டும் அஷரெங்கா டெனிஸ் தொடர்களில் பங்குகொள்ளவுள்ளமை இரசிகர்கள் மத்தியில் ஆதரவைப்பெற்றுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106