ஜனவரி 7 இல் முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ள இலங்கை கிரிக்கட் சபை !
Thursday, December 14th, 2017
இலங்கை கிரிக்கெட் சபை எதிர்வரும் ஜனவரி மாதம் 7ம் திகதி விசேட கூட்டத்தை நடத்துவது தொடர்பான கருத்தை வெளியிட்டுள்ளது. இக்கூட்டத்தில், தற்போது நடைமுறையில் உள்ள இலங்கை கிரிக்கெட் சட்டதிட்டங்களில் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்களை செய்ற்படுத்துவது, புதிய திட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவருவது தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள்
உப தலைவராகப் பதவி வகித்த ஜயந்த தர்மதாசவின் பதவி விலகலையடுத்து, முன்னாள் உப செயலாளர் மோகன் டி சில்வா அப்பதவிக்குத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இதனால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு புதிய பொதுச் செயலாளர் ஒருவரை இக்கூட்டத்தின்போது தேர்ந்தெடுப்பது தொடர்பாகவும் இலங்கை கிரிக்கட் சபை எதிர்பார்த்துள்ளது. உள்நாட்டுப் போட்டி விதிமுறைகள் மற்றும் போட்டிகளின் நிலை குறித்தும் பேசப்படும் என இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
உள்ளூர் கிரிக்கட் போட்டிகள் தொடர்பாகவும், எதிர்கால கிரிக்கட்டை கட்டியெழுப்புவது தொடர்பாகவும், முன்னாள் வீரர்கள் தலைமையில் நிகழ்ச்சித்திட்டங்களையும், ஆலோசனைகளையும் முன்வைக்குமாறும் பணித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்க அம்சமாகும்
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106