குப்பை அகற்றுவதற்கு உதவுகிறது தென் கொரியா!
Sunday, December 10th, 2017
தென்கொரியாவின் ஏற்றுமதி – இறக்குமதி வங்கியானது 14 மில்லியன் டொலர் கடன் உதவிகளை குப்பை அகற்றும்தொழின்முறைக்கு பயன்படும் வகையில் இலங்கைக்கு வழங்க அனுமதி வழங்கியுள்ளது.
இதனை இலங்கைக்கான கொரியத் தூதரகம் தெரிவித்துள்ளது. குறித்த திட்டத்தின் கீழ் அனைத்து மாகாணங்களுக்கும்190 குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும், திடக் கழிவுகளை திறமையான முறையில் அகற்றுவதேஇதன் பிரதான நோக்கம் எனவும் கூறப்படுகின்றது.
அதன்படி, இந்த வாகனங்கள் அனைத்தும் குறைந்த நேரத்தில், குறைந்த செலவில் பாரியளவு குப்பைகளை சிறந்தமுறையில் அகற்றும் வல்லமை கொண்டன என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், வட்டியில்லாமல்வழங்கப்படவுள்ள இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த மொத்தம் நாற்பது ஆண்டு கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106