பொதுமன்னிப்புக் காலம் மீண்டும் பிரகடனம்!
Sunday, May 29th, 2016
அனுமதியற்ற துப்பாக்கிகளை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்காக மீண்டும் பொதுமன்னிப்புக் காலத்தை பாதுகாப்பு அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ளது.
இதன் பிரகாரம் மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 17 ஆம் திகதி வரை மீண்டும் பொதுமன்னிப்புக் காலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடக மையம் தெரிவித்துள்ளது.
பொது மக்களிடமிருந்து கிடைத்துள்ள கோரிக்கைகளை கவனத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. பொதுமன்னிப்புக் காலப் பகுதிக்குள், அனுமதியற்ற துப்பாக்கிகளை அருகிலுள்ள பொலிஸ் நிலையம், பிரதேச செயலகம் அல்லது மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்க முடியும் என்றும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
நிர்ணய விலைக்கு அமைய சீனியை விற்பனை செய்ய முடியாதுள்ளது – இறக்குமதியாளர்கள்!
பல்கலை மாணவர்களுக்கு விஷேட அறிவிப்பு - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்!
இந்திய மக்களவைத் தேர்தல் - பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஜனாதிபதி வாழ்த்து!
|
|
|


