வார இறுதி நாட்களில் சுற்றுசூழலை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் – அமைச்சர் மஹிந்த அமரவீர!

Friday, June 4th, 2021

உலக சுற்றாடல் தினம் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைவரும் தமது வீடுகளையும் சுற்றுப்புர சூழலையும் சுத்தப்படுத்தும் வேலைத்திட்டதை முன்னெடுக்க வேண்டுமென சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கொரோனோ தொற்றுப்பரவலுக்கு மத்தியில் மக்கள் ஒன்றிணைத்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனால் நாளையும் நாளை மறுதினமும் சுற்று சூழலை சுத்தம் செய்வதற்குரிய நாளாக பிரகடனப்படுத்தியுள்ளோம்.

தொடர்ந்து நிலவும் மழைக் காரணமாக அடுத்த இரண்டு மாதங்களில் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் உள்ளது. கொரோனாவுக்கு மத்தியில் டெங்கு நுளம்பு தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும் .

எனவே, எமது சூழல் கட்டமைப்பை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளின் கீழ் மக்கள் தமது சுற்றுப்புற சூழலை தூய்மையாக்க முன்வர வேண்டும் என என அமைச்சர் மேலும் தெரிவித்தார்

000

Related posts:

வணிக விவசாயக் கருத்திட்டங்களுக்காக காணிகளை நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் முதலீட்டாளர்களுக்கு வழங்க...
எதிர்வரும் திங்களன்று ஐ.நா. அமர்வு அரம்பம் - ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழு நாளைமறுதினம் ஜெனிவா பயணம...
மேல் மாகாணத்தைப் போன்று உயர்தர சுகாதார சேவைகளை கொண்ட மாகாணமாக வடக்கு அபிவிருத்தி செய்யப்படும் - ஜனாத...