புலமைப்பரிசில் திட்டத்திற்கு உள்வாங்கப்படவுள்ள மாணவர்கள் பதிவு!
Friday, December 8th, 2017
2018 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் புலமைப்பரிசில் திட்டத்திற்கு அரியாலை அபிவிருத்திச் சங்கத்தினால் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பதிவு செய்யப்படவுள்ளனர்.
இப்பதிவுகள் எதிர்வரும் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை யாழ்.அரியாலை பூம்புகார் அ.த.க. பாடசாலைக்கு அருகாமையிலும் மற்றும் ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்திற்கு அருகில் உள்ள மண்டபத்திலும் இடம்பெறவுள்ளன. 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையும் அரியாலை திருமகள் சனசமூக நிலையம் மற்றும் அரியாலை சனசமூக நிலையம் என்பனவற்றிலும் பதிவுகள் இடம்பெறவுள்ளன.
இத்திட்டத்தில் அரியாலை பிரதேசத்தைச் சேர்ந்த 2018 இல் தரம் 5 இல் கல்வி கற்கவுள்ள மாணவர்கள் பதிவு செய்ய முடிவதுடன் இப் புலமைப்பரிசில் திட்டத்திற்கு உள்வாங்கப்படும் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புக்களுக்கான கட்டணம், கல்விசார் உபகரணங்கள் மற்றும் சித்தி பெறும் மாணவர்களுக்கு வெகுமதிகள் என்பன வழங்கப்படுவதுடன் ஒரு மாணவனுக்கு தலா பன்னிரண்டாயிரம் ரூபா செலவு செய்யும் புலமைப்பரிசில் உதவி எனத் தெரிவிக்கப்படுகின்றது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106