பொலிஸார் தேடும் ஆவா குழுத் தலைவர் சுவிஸிலிருந்து வந்து திரும்பியது எப்படி?

Friday, December 8th, 2017

இலங்கைப் பொலிஸாரால் தீவிரமாக தேடப்பட்டுவரும் ஆவாகுழுவின் தலைவர் சுவிஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்து சென்றமை எப்படியென கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. குடாநாட்டில் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழுவின் தலைவர் சுவிற்சர்லாந்தில் உள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரிலுள்ள கைக்கடிகார தொழிற்சாலையில் ஆவா குழுவின் தலைவர் வேலை செய்வதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஆவா குழுவின் தலைவரை இலங்கைப் பொலிஸார் மற்றும் புலனாய்வுத் பிரிவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இவ்வாறான நிலையில், அண்மையில் ஆவா குழுவின் தலைவர் சுவிஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்து சென்றதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இலங்கை புலனாய்வுப் பிரிவுகளுக்கு எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. ஜெனீவாவில் உள்ள தூதரகத்தில் இலங்கை புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் செயற்படாமையே இதற்குக் காரணமாகும்.

சுவிஸில் செயற்படுமு; ஆவா குழுவின் தலைவர் அனுப்பும் பணத்தின் மூலம் யாழ்ப்பாணத்தில் பல்வேறு வாள்வெட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக அந்த ஊடகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106