உலக கிண்ண கால்பந்து தொடருக்கான அட்டவணை வெளியீடு!
Tuesday, December 5th, 2017
ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கிண்ண கால்பந்து தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
உலகக் கிண்ண கால்பந்து தொடர், ரஷ்யாவில் அடுத்த ஆண்டு ஜூன் 14ஆம் திகதி முதல் ஜூலை 15ஆம் திகதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.
32 நாடுகள் பங்கேற்கும் இந்த தொடரில், போட்டியை நடத்தும் நாடு என்பதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றது. ஏனைய 31 அணிகளும் தகுதிச் சுற்று மூலமாக தகுதி பெற்றன.பலம் வாய்ந்த அணிகளான இத்தாலி மற்றும் நெதர்லாந்து இம்முறை தகுதி பெறவில்லை. இந்நிலையில், மாஸ்கோவில் நேற்று முன்தினம் இரவு குலுக்கல் முறையில் ஒவ்வொரு அணியும் இடம் பெறும் பிரிவு தேர்வு செய்யப்பட்டது.
இதில் ‘ஏ’ பிரிவில், ரஷ்யா, உருகுவே, எகிப்து, சவுதி அரேபியா அணிகளும்,
‘பி’ பிரிவில், ஸ்பெயின், போர்ச்சுகல், ஈரான், மொராக்கோ அணிகளும்
சி’ பிரிவில், பிரான்ஸ், பெரு, டென்மார்க், அவுஸ்திரேலியா அணிகளும்,
‘டி’ பிரிவில், அர்ஜென்டினா, குரோஷியா, ஐஸ்லாந்து, நைஜீரியா அணிகளும் இடம் பெற்றுள்ளன.
’இ’ பிரிவில் பிரேசில், சுவிட்சர்லாந்து, கோஸ்டா ரிகா, செர்பியா அணிகளும், ‘எஃப்’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, மெக்சிகோ, சுவீடன், தென் கொரியா அணிகளும்
ஜி’ பிரிவில் பெல்ஜியம், இங்கிலாந்து, துனிசியா, பனாமா அணிகளும்,
‘ஹெச்’ பிரிவில் போலந்து, கொலம்பியா, செனகல், ஜப்பான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்தத் தொடரின் அனைத்து ஆட்டங்களும் ரஷ்யாவில் உள்ள 11 நகரங்களில், 12 மைதானங்களில் நடத்தப்பட உள்ளது.லீக் சுற்றில், ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். இதில் புள்ளிகள் அடிப்படையில், ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் என மொத்தம் 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும்.இந்தத் தொடரின் முதல் ஆட்டம் ஜூன் 14ஆம் திகதி, போட்டியை நடத்தும் ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106