ஆவாக்குழு தலைவரை சுவிஸிலிருந்து கைது செய்து இங்கு கொண்டு வருவோம்!

Sunday, December 3rd, 2017

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளை நடத்தி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் ஆவா குழுவின் தலைவர் பிரசன்னாவை பன்னாட்டு பொலிஸாரின் உதவியுடன் கைது செய்து சுவிஸிலிருந்து இங்கு கொண்டு வருவோம் என யாழ்ப்பாண தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஹேமவிதாரன சூளுரைத்துள்ளார்

வன்முறைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 பேரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்ட வாள்களை ஊடகங்களுக்கு காண்பிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளை அரங்கேற்றி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ஆவா குழு எனப்படும் ஒரு குழு செயற்பட்டு வருகின்றது. தம்மை ஓர் அடாவடிக்குழுவாக காண்பிப்பதே இந்த இளைஞர் குழுவின் நோக்கமாகும்.

இவர்களை வழிநடத்தும் தலைவர் சன்னா என அழைக்கப்படும் பிரசன்னா தற்போது சுவிஸ் நாட்டுக்கு தப்பித்து அங்கு வாழ்ந்து வருகிறார்.  அவர் தொடர்பான முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. அவரின் செயற்பாடுகள் தொடர்பில் கண்காணித்து வருகின்றோம். விரைவில் அவரைக் கைது செய்வோம் என்றார்



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106