இந்திய – இலங்கை கடற்படை இடையே பேச்சுவார்த்தை!
Saturday, December 2nd, 2017
இந்திய – இலங்கை கடற்படையினருக்கிடையில் அடுத்த மாதம் பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதாக இந்திய கிழக்கு பிராந்திய கடற்படையின் ரியர் அட்மிரல் அலோக் பட்நாகர் தெரிவித்துள்ளார்.
கடல் எல்லைப் பகுதியில் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்வகையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதமாக அவர் கூறியுள்ளார்.
மேலும் – இயற்கை பேரிடர் காலங்களில் மீனவர்கள் ஆழ்கடல் பகுதியில் சிக்கி கொண்டால் அவர்களை மீட்பதற்கு கடற்படை எப்போதும் தயாராக உள்ளது. வருங்காலங்களில் மீனவர்கள் எல்லை பகுதியில் சுமுகமாக மீன் பிடிப்பதற்கும், அவர்களது பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும் அடுத்த மாதம் இலங்கை கடற்படையினருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.
சென்னையில் கடற்படை தளம் அமைப்பதற்காக தமிழக அரசிடம் இந்திய கடற்படை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கடலில் தத்தளித்த 14 மீனவர்கள் இதுவரை எங்களது வீரர்களால் மீட்கப்பட்டு உள்ளனர். கிழக்கு பிராந்திய கடற்படை இந்த ஆண்டு தனது பொன் விழாவை கொண்டாடுகிறது என்று மேலும் கூறியுள்ளார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106