வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை மின்தடை
Wednesday, November 29th, 2017
மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை வியாழக்கிழமை(30) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன் படி, நாளை காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை வவுனியா மாவட்டத்தின் பம்பைமடு கிராமம், கற்பகபுரம் கிராமம், பட்டானி சூரிலிருந்து நெளுக்குளம் ஊடாக இராஜேந்திர குளம் வரை, ஒமேகா லைன், அரசன் அரிசி ஆலை, சியாம் அரிசி ஆலை, ஸ்ரீரங்கம் அரிசி ஆலை, தெய்வேந்திரம் அரிசி ஆலை, கயன் அரிசி ஆலை, அஸ்வி அரிசி ஆலை, ஜீவன் அரிசி ஆலை ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் கூறியுள்ளார்.
Related posts:
கிளிநொச்சியில் 20.5 மில்லியன் செலவில் குளங்கள் புனரமைப்பு!
மார்ச் முதல் வாரத்தில் முன்மொழியப்பட்ட பயங்கரவாத சட்ட திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் - ...
இலங்கைக்கு பணம் அனுப்புவோருக்கு அதிகரிக்கப்பட்ட வரிச்சலுகை நிவாரணம் - தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை...
|
|
|


