வினைத்திறனை அதிகரிப்பதற்கான செயற்பாடுகளை விரிவுபடுத்துமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்பு!

Thursday, September 22nd, 2022

இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் அமைச்சின் கீழுள்ள ஏனைய நிறுவனங்களின் வினைத்திறனை அதிகரிப்பதற்காக செயற்பாடுகளை விரிவுபடுத்துமாறு துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாடாளுமன்றத்தில் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.     

உலகின் பல நாடுகளைப் போன்று இலங்கையிலும் துறைமுகத்தில் பாரம்தூக்கி (கிரேன்) இயக்குநர்களாக பெண்களும் தற்போது பணிபுரிந்து வருகின்றனர்.

எதிர்காலத்தில் மேலும் பலரை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து தொடர்பான அமைச்சு ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டத்தில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106